Tuesday, March 1, 2011

thamizh eezham



நல்ல தமிழ்
குருதியில்  தோய்ந்து 
உப்பில் ஊறி
சக்கரம் நசுக்கி
புதைந்து மக்கி
எருவாய் இருக்கிறது 
நல்ல தமிழ்.
மீண்டும் விளையும்
துவக்குகள்
மீளவும் மலரும்
நல்ல தமிழ். 
  
   

Friday, February 25, 2011

Boiled Full Moon

நகர மங்கை

உதடு சாயம். உள்ளம் மாயம்.
உண்மையற்ற உருவினில்
மேடு பள்ளம் அதிகம் உண்டு 
கோடு போன்ற மேனியில்.
அலங்கரித்த கூந்தல் நீளம்
அளந்து வைத்த பல்லி வால்
ஆக மொத்தம் நகர மங்கை
வேக வைத்த வெண்ணிலா/

 

Thursday, February 24, 2011

Learning

நூற்கடல்
பாற்கடல் உண்டோ! பாம்புண்டோ? நஞ்சுண்டோ?
வடமிட்டு இழுக்க வல்லசுரர் தேவருண்டோ?
ஏதும் அறிகிலேன். ஆயின் ஈதறிவேன் - என்னுயிரே!
நூற்கடல் உண்டு. நுண்ணறிவால் அதை கடைய 
வரும் ஞானம். உண்டு தெளி!

Wednesday, February 23, 2011

Creatures

மின்மினிப் பாடம்
பரவித் திரியும் 
மின்மினிக் குழுவைப்
பாங்குடன் ஆடிக் கூட்டில் அடைத்தால்
பவர்க் கட் இருட்டிலும்
பாடம் படிக்கலாம்!    

Tuesday, February 22, 2011

Sculptures

மாணவம்
 
செதுக்கும் உளியை
அனுமதிக்கும் கற்கள்
சிற்பங்களாகின்றன!